விளாத்திகுளம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் 1800 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
விளாத்திகுளம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் 1800 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் 1800 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ராபி பருவ சாகுபடி
விளாத்திகுளம் அருகேயுள்ள சூரங்குடி குளத்தூர், புளியங்குளம், வேடபட்டி, விருசம்பட்டி, வேடநத்தம், பூசனூர் ஆகிய பகுதிகளில் இந்தாண்டு ராபி பருவத்தில் சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் உளுந்து, கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். ஏற்கனவே புரட்டாசி மாத மழையினை நம்பி பயிர் செய்து இருந்தனர். அப்போது மழை பொய்த்து போனதால் செடிகள் கருகி விவசாயம் பாதிக்கப்பட்டது. இது போன்று 2 முறை விதைப்பு செய்தும் பயிர்கள் கருகிப்போனதால், சமீபத்தில் 3-வது முறையாக விவசாயிகள் விதைப்பு பணிகள் மேற்கொண்டனர்.
பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிய வாய்ப்பு இல்லாத நிலையில், தொடர்ந்து மழை பெயது வருவதால் சுமார் 1,800 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை நீர் தேங்கி கிடப்பதால், பயிர்கள் அழுகி சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story