வெள்ளகோவிலில் கார்கள் மோதியதில் நிதி நிறுவன அதிபரின் மனைவி பலி
வெள்ளகோவிலில் கார்கள் மோதியதில் நிதி நிறுவன அதிபரின் மனைவி பலி
வெள்ளகோவில்,
வெள்ளகோவிலில் கார்கள் மோதியதில் நிதி நிறுவன அதிபரின் மனைவி பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார்கள் மோதல்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் தென்னிலை அருகே உள்ள பெரிய திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52), கோவையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் சக்திவேலும், அவரது மனைவி கோகிலாம்பாளும் (42), காரில் திருப்பர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்தனர். இரவில் அங்கேயே தங்கிவிட்டனர்.
பின்னர் நேற்று காலை முத்தூர் அருகே வள்ளியரச்சலில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
வெள்ளகோவில் கடைவீதியில் கார் வந்து கொண்டிருந்த போது கோவையில் இருந்து கரூர் நோக்கி வந்த மற்றொரு கார் சக்திவேல் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் சக்திவேல், கோகிலாம்பாள் இருவரும் பலத்த காயம் அ்டைந்தனர்.
பெண்பலி
உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கோகிலாம்பாள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சக்திவேலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story