காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
காங்கேயம்,
காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
சிவன்மலை
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்திபெற்ற கோவிலாகும். மேலும் சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயகப்பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது. நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி சிறப்பு அம்சமாகும்.
சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நிகழ்சிகள் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. அப்போது பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவை முன்னிட்டு தினமும் காலையில் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனையும் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருக்கல்யாண உற்சவம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலையில் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமான் சமேத வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் திருவுலாக்காட்சி நடைபெற்றது. சஷ்டி விரதம் கடைபிடித்தகர்கள், தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்.
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா தொடர்பான, அனைத்து உற்சவ நிகழ்ச்சிகளும் கோவிலுக்குள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெ.முல்லை மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story