பகண்டை கூட்டுரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பகண்டை கூட்டுரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ரிஷிவந்தியம்
வாணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகண்டை கூட்டு ரோட்டில் ஒருங்கிணைந்த ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு சென்று வர அருகிலுள்ள ஓடையை பாதையாக அதிகாரிகள், விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் திடீர் மழையால் அருகில் இருந்த பண்டான் தாங்கல் ஏரி நிரம்பி தண்ணீர் ஓடை வழியாக வெளியேறியதால் விவசாயிகள், அலுவலர்கள் வேளாண்மை அலுவலகத்துக்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், அரியலூர் வருவாய் ஆய்வாளர் இளையராஜா, வாணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஆகியோர் வேளாண்மை அலுவலகம் அருகில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி பாதை வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர். அப்போது பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை, அட்மா தலைவர் பத்மநாபன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story