அன்னவாசல் பகுதியில் தொடர் மழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு


அன்னவாசல் பகுதியில் தொடர் மழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 10 Nov 2021 11:48 PM IST (Updated: 10 Nov 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

அன்னவாசல்:
தொடர் மழை 
வடகிழக்கு பருவமழை கடந்த 26-ந்தேதி தொடங்கியது. அதன்பின் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஒரு வாரத்திற்கு மேலாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொடர்மழை காரணமாக காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.30-க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.60-க்கு விற்பனையானது. ரூ.20-க்கு விற்ற தக்காளி ரூ.80-க்கும், ரூ.30-க்கு விற்ற பீன்ஸ், கேரட், கத்தரிக்காய் 80-ரூபாய்க்கும், சில்லரை விற்பனை கடைகளில் 100-ரூபாய்க்கும் விற்பனையானது. 
காய்கறி விலை கடும் உயர்வு 
ரூ.15-க்கு விற்ற வெண்டைக்காய், முள்ளங்கி, முட்டைகோஸ், சவ்சவ் ரூ.50-க்கும், ரூ.20 மற்றும் ரூ.30-க்கு விற்ற கருணை கிழங்கு, உருளைக்கிழங்கு ரூ.60-க்கும், மாங்காய் கிலோ ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தோட்ட காய்கறிகளை தவிர, வெங்காயம், உருளை, பீன்ஸ், கேரட், கோஸ் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகள் வெளியில் இருந்து வருகிறது. தொடர் மழை காரணமாக இதன் வரத்து குறைந்தால் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

Next Story