சேந்தமங்கலத்தில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சேந்தமங்கலத்தில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2021 12:08 AM IST (Updated: 11 Nov 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலத்தில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். சாலை பணியாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மழை கோட், கடப்பாரை, மண்வெட்டி போன்ற பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறியும் அவர்களின் நடவடிக்கை குறித்து நாமக்கல் நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜாகீர்உசேன், மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளர் தமிழ், மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம், மாநில செயலாளர் செந்தில்நாதன் உள்பட மாநில, மாவட்ட, நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story