காட்பாடியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


காட்பாடியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 Nov 2021 12:33 AM IST (Updated: 11 Nov 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

காட்பாடி

காட்பாடி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருடைய உறவினரான லாரி டிரைவர் அருண்குமார் (வயது 21) என்பவர் அவரிடம் ஆசைவார்த்தை கூறி அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. எனவே அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காட்பாடி மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஞ்சனா வழக்குப்பதிவு செய்தார். பின்னர் சிறுமியை கர்ப்பமாக்கிய அருண்குமாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


Next Story