‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Nov 2021 12:34 AM IST (Updated: 11 Nov 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம்
 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மகாதானபுரம் தீர்த்தாம்பாளையம் தெருவில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
ராஜா, கரூர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தஞ்சை ரோடு தென்புறம் அமைந்துள்ள 65-வது வார்டில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து உள்ளது. மேலும், வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் மழையால் சேதம் அடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்மதி, திருவெறும்பூர், திருச்சி.
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் கிருஷ்ணாபுரம் சோதனைச்சாவடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பிகா, எடமலைப்பட்டி புதூர், திருச்சி.
திருச்சி மாவட்டம் 62-வது வார்டு வடக்கு காட்டூர் பாரதிதாசன் 10-வது தெருவில் சாக்கடை வசதி இல்லாத காரணத்தால் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே மழைநீரை அகற்றுவதுடன், இப்பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
மணியழகன், திருச்சி.
பாலத்தை சீரமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டையில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையில் உள்ள காவிரி பாலத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதகாரிகள் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்.
பாபு, மலைக்கோட்டை, திருச்சி.
சேறும், சகதியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம் ஊராட்சி யாகூப்ஹசன்பேட்டையில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், புதுக்கோட்டை.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட கழுவந்தோண்டி கிராமத்தில் 2-வது வார்டில் பள்ளிக்கூட தெருவில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரி, அரியலூர்.
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, சுதர் நகரில் உள்ள சாலை தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
கிருஷ்ணன், லால்குடி, திருச்சி.
கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, இனுங்கூர் கிராமம், இ.புதுப்பட்டியில் இருந்து கரைவழியாக   இனுங்கூர் செல்லும் பாதை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
கார்த்திக், கரூர்.
மது அருந்தும் இடமான பயணிகள் நிழற்குடை
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடை இருக்கை வசதியுடன் கட்டப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் மதுபிரியர்கள் இங்கு அமர்ந்து மது குடித்து வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் செல்ல அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், அரியலூர்.
மின்விளக்கு அமைக்க கோரிக்கை
திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் முதல் கிராப்பட்டி வரையில் சாலையின் நடுவே மின் விளக்குகள் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
லூர்து, திருச்சி.


Next Story