ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று கலெக்டர்அலுவலகம் முன்பும், 10 தாலுகா அலுவலகங்கள் மற்றும் 3 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் முன்பும் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த சட்டமன்ற தேர்தல் செலவினங்களை உடனடியாக வழங்க கோரியும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேர்தல் மதிப்பூதியத்தை வழங்க வலியுறுத்தியும், மாவட்டத்தில் தேர்தல் பணியிடத்திற்கு துணை கலெக்டர் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் இம்மாதம் 13, 14 மற்றும் 27,28 தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story