வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
நொய்யல்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ரமாதேவி. இவர் தற்பொழுது விடுப்பில் இருப்பதால் இவருக்கு பதிலாக கரூர் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பேபி என்பவர் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்.ஆயுதப்படை போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பேபி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக அவருக்கு அதிகளவில் காய்ச்சல் இருந்துள்ளது.இதனால் கொரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தகவல் அறிந்த புஞ்சை புகளூர் பேரூராட்சி நிர்வாகம் போலீஸ் நிலையம் முழுவதும் மற்றும் அலுவலகத்தில் உள்ள அறைகளில் கிருமி நாசினி தெளித்தனர்.
Related Tags :
Next Story