முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்


முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 11 Nov 2021 1:25 AM IST (Updated: 11 Nov 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் முருகன் கோவில்களில் நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.

நெல்லை:
நெல்லையில் முருகன் கோவில்களில் நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோவில்களில் கடந்த 4-ந்தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், சாலைக்குமார சுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாணம்

சூரனை வதம் செய்த முருகனுக்கு தெய்வானையை திருமணம் செய்து கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில் காந்திமதி அம்பாள் சன்னதியில் சுப்பிரமணியர்-தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் ஆறுமுக நயினார் சன்னதியில் திருக்கல்யாணம்  நடைபெற்றது.

இதே போல் குறுக்குத்துறை மேலக்கோவில், சந்திப்பு சாலை குமாரசுவாமி கோவில், மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்கள் மற்றும் சிவன் கோவில்களில் அமைந்துள்ள முருகன் சன்னதிகளிலும் நேற்று இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story