மழை வெள்ள பாதிப்பில் மக்கள் துயரை போக்கும் போலீசாரின் மனிதநேய பணி - முதியோர்களுக்கு உதவிக்கரம்
மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போலீசார் உணவு பொட்டலங்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். மேலும் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு போர்வை, பிரட், பிஸ்கட் பாக்கெட் போன்ற பொருட்களை வழங்கினார்.
சென்னை,
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் வெள்ள நீரை வெளியேற்றுதல், கீழே விழுந்த மரங்களை அகற்றுதல், வெள்ள பகுதியில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பவர்களை மீட்டு அழைத்து வருதல் போன்ற மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை திருவான்மியூர் போலீஸ்நிலையம் சார்பில் பெரியார் நகரில் வசிக்கும் நரிக்குறவ மக்களுக்கு உணவு பொட்டலங்கள், அரிசி மற்றும் மளிகை பொருட்கள், போர்வை போன்ற பொருட்களை இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் நேற்று வழங்கினார்.
மேலும் அவர், காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்துக்கு சென்று அங்கு வசிக்கும் முதியவர்களுக்கு போர்வை, பிரட், பிஸ்கட் பாக்கெட் போன்ற பொருட்களை வழங்கினார். குழந்தைகளுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவான்மியூர் போலீஸ்நிலையத்தின் தலைமை போலீஸ்காரர் ராஜா செய்திருந்தார்.
மழை வெள்ள பாதிப்பில் மக்களின் துயரை போக்கும் போலீசாரின் மனிதநேய பணி போற்றுத்தலுக்குரியது ஆகும்.
Related Tags :
Next Story