தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார்.
முப்பெரும் விழா
தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 75 வது சுதந்திரதினவிழா, தமிழிசை விழா மற்றும் 23-வது இசைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழா கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு இசைப்போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் தமிழிசை விழா நிகழ்ச்சி நடத்திய கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் இசைத்துறையில் சிறப்பு வாய்ந்த மாவட்டமாக திகழ்கிறது. நமது மாவட்டம் இசை மாமேதை நல்லப்ப சுவாமிகள், சங்கரதாஸ் சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் பிறந்த மாவட்டம் என்பது நமது அனைவருக்கும் பெருமையாகும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இசைப்பள்ளி செயல்படுவது பொருத்தமான ஒன்றாகும். எளிய மக்களுக்கும் கருத்துக்களை கொண்டு செல்லும் சிறந்த கருவியாக நாடகங்கள் உள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் மக்களுக்கு நாட்டுப்பற்றினை வளர்த்ததில் நாடகங்களின் பங்கு இன்றியமையாதது.
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு திறந்தவெளி கலையரங்கம் வேண்டும் என்ற கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
முன்னதாக விழாவில் நாதசுரம், தவில் மற்றும் மங்கள இசை நிகழ்ச்சியும், பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், இசைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமசெல்வி, தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின், தூத்துக்குடி பண்பலை ஒலிபரப்பு வானொலி நிலையம் நிகழ்ச்சி பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் இசை ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story