குமரன் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை பாலம் ஆகியவற்றில் நடைபாதை ஆக்கிரமிப்பு


குமரன் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை பாலம் ஆகியவற்றில் நடைபாதை ஆக்கிரமிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2021 6:52 PM IST (Updated: 11 Nov 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் குமரன் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை பாலம் ஆகியவற்றில் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பாதசாரிகள் அவதியடைந்துள்ளனர்.

திருப்பூர்
திருப்பூரில் குமரன் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை பாலம் ஆகியவற்றில் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பாதசாரிகள் அவதியடைந்துள்ளனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
திருப்பூர் குமரன் ரோடு எப்போதும் வாகன நெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும். சாலையின் இருபுறமும் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நடைபாதைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் சாலையிலேயே பாதசாரிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கட்டிட கழிவுகளை நடைபாதையில் கொட்டி வைத்துள்ளதால் பாதசாரிகள் நடப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல் எம்.ஜி.ஆர். சிலை பாலத்தின் இருபுறமும் பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நடைபாதைகள் பயணிகள் காத்திருக்கும் இடமாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆர். சிலையை தாண்டி, பார்க் ரோட்டோரம் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி சென்றால் பாலத்தில் வாகன நெரிசல் குறைவதுடன் நடைபாதை பகுதியில் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதுபோல் நடைபாதைகளில் பயணிகள் காத்திருப்பதால், சாலையிலேயே பாதசாரிகள் நடந்து செல்கிறார்கள். இதன்காரணமாக வாகனங்கள் பாதசாரிகள் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே பயணிகளை பார்க் ரோட்டில் காத்திருந்து பஸ்களில் ஏறி சென்றால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
சாலையில் குவிந்த மண்
அதுபோல் மழைக்காலம் என்பதால் சாலையின் நடுவில் மற்றும் ஓரமாக மண் குவியல் அதிகமாக காணப்படுகிறது. காற்றடிக்கும்போது சாலையில் புழுதி பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மேலும் மண் சறுக்கி விபத்தையும் சந்தித்து வருகிறார்கள். மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Next Story