நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழைக்கு 22 ஏரிகள் நிரம்பின-பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் தொடர்மழைக்கு இதுவரை 22 ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
22 ஏரிகள் நிரம்பின
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீட்டர் ஆகும். இந்த ஆண்டில் இதுவரை சுமார் 800 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது சராசரியை விட சுமார் 84 மி.மீட்டர் கூடுதலாகும். இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் 79 ஏரிகள் உள்ளன. இவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றில் நேற்று வரை 22 ஏரிகள் நிரம்பி உள்ளன. அவை வருமாறு:-
மின்னக்கல், சேமூர், அக்கரைபட்டி, கோட்டபாளையம், ஏமப்பள்ளி, மல்லசமுத்திரம் பெரியஏரி, மல்லசமுத்திரம் சின்னஏரி, மாமுண்டி அக்ரஹாரம், தேவனாம்பாளையம், பருத்திபள்ளி, பாலமேடு சின்னஏரி, மாணிக்கம்பாளையம், இலுப்புலி, செருக்கலை, இடும்பன்குளம், துத்திக்குளம், பெரியகுளம், பொம்மசமுத்திரம், சீராப்பள்ளி, எருமப்பட்டி, புதுக்குளம் மற்றும் வரகூர் ஏரி.
42 ஏரிகளில் தண்ணீர் இல்லை
இதேபோல் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஏரி 75 சதவீதமும், 3 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும், 5 ஏரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதமும் 6 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழும் நிரம்பி உள்ளன. 42 ஏரிகள் தண்ணீரின்றி காணப்படுகின்றன. அவற்றில் சிறு, சிறு கிடங்குகளில் மட்டுமே மழைநீர் தேங்கி நிற்கிறது. அவற்றின் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளே தண்ணீர் நிரம்பாமல் இருப்பதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story