மின்னணு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு


மின்னணு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 11 Nov 2021 11:01 PM IST (Updated: 11 Nov 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மின்னணு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. 
பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நகர்ப்புற தேர்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
இதில் 300 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 620 வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 5 சதவீத எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி 16 கட்டுப்பாட்டு எந்திரங்களில் ஒவ்வொரு எந்திரத்திலும் ஆயிரம் மாதிரி வாக்குப்பதிவுகள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் சரிபார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருப்பு அறையில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டு நகர்ப்புற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமாரி(ஊரக வளர்ச்சி), முரளி(தேர்தல்), நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story