சட்ட விழிப்புணர்வு முகாம்
நத்தம் அரசு பெண்கள் பள்ளியில் சட்டப்பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நத்தம்:
நத்தம் சட்டப்பணிகள் குழு சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு சட்ட பணிகள் குழு தலைவர் நீதிபதி கலையரசிரீனா தலைமை தாங்கினார். நத்தம் வக்கீல்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் ஜேசுதாஸ் வரவேற்றார். இதில் போக்சோ சட்டம், குழந்தை திருமணம், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால் என்ன தண்டனை கிடைக்கும்? என்பது குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில், வக்கீல்கள், போலீசார், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் ஜோசப் செல்வராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story