மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம். மேற்பார்வை பொறியாளர் வேண்டுகோள்


மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம். மேற்பார்வை பொறியாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Nov 2021 12:00 AM IST (Updated: 12 Nov 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் மின்விபத்துகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மின்கம்பம் அவற்றை தாங்கும் மின்கம்பிகளில் கால்நடைகள், விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. 

மழை மற்றும் காற்றில் அறுந்து விழுந்த மின்கம்பிகளின் அருகே செல்லக்கூடாது. இதுகுறித்து உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்களில் மின்வாரிய பணியாளர்கள் தவிர வேறு யாரும் ஏறக்கூடாது. விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்ககூடாது போன்று பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து மின்வாரியத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story