சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது
திருப்பத்தூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்துார்,
திருப்பத்தூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கர்ப்பிணி
திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் கணபதி(வயது 19). இவர் வலையபட்டியில் பொக்லைன் எந்திர உதவியாளராக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது கணபதி தனது முதலாளி வீட்டுக்கு டியூசன் படிக்க வந்த 17 வயது சிறுமியை காதலித்தார். சிறுமியின் தாய் இறந்ததை தொடர்ந்து அவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். பிளஸ்-2 படிப்பை முடித்த நிலையில் அந்த சிறுமி கருவுற்று இருந்தார்.
இதை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்த போது அவர் கணபதி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி கூறி இருக்கிறார்.
வாலிபர் கைது
இதையடுத்து சிறுமியின் உறவினர்கள், கணபதியை திருமணம் செய்து வைக்க முயற்சித்து உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்..
இதனால் சிறுமியின் தந்தை ெகாடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் சி்த்திரைச் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சவுதாம்பால், சிறுமியை மீட்டு மதகுபட்டி பெண்கள் காப்பகத்தி்ல் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து கணபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story