வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தரக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் மணக்கோலத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிர்வாகி


வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தரக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் மணக்கோலத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிர்வாகி
x
தினத்தந்தி 12 Nov 2021 12:46 AM IST (Updated: 12 Nov 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தரக்கோரி திருவையாறில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மணக்கோலத்தில் பா.ம.க. நிர்வாகி கலந்து கொண்டார்.

திருவையாறு:-

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தரக்கோரி திருவையாறில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மணக்கோலத்தில் பா.ம.க. நிர்வாகி கலந்து கொண்டார். 

இட ஒதுக்கீடு கோரிக்கை

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் ரத்து செய்தது. இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற்றுத்தரக்கோரி தஞ்சை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் திருவையாறில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இ்ந்த ஆர்ப்பாட்டத்துக்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில இளைஞரணி துணைத்தலைவர் விஜயராகவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட தலைவர் முன்னரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மணக்கோலத்தில் நிர்வாகி பங்கேற்பு

இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். நிர்வாகிகள் ராம்குமார், மதிவிமல், ரமேஷ், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
பா.ம.க. திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கர்ணனுக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில் அவர் மணக்கோலத்தில் தனது மனைவி வசந்தியுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார். 
முன்னதாக பா.ம.க. நிர்வாகிகள் திருவையாறு பாலக்கரையில் இருந்து ஆர்ப்பாட்டம் நடந்த பஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர். 

Next Story