‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைத்தொட்டி வேண்டும்
தஞ்சை தாலுகா போலீஸ் நிலையம் எதிரே உள்ள சாலையோரத்தில் பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் பயன்பாட்டுக்காக குப்பைத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த குப்பைத்தொட்டி அந்த பகுதியில் இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் கடைவியாபாரிகள் சாலையேராம் குப்பைகளை போட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகளில் மழைநீர் தேங்கி சாக்கடை போல் காட்சி அளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், மீண்டும் அந்த பகுதியில் குப்பைத்தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.
சாலை நடுவே ஆபத்தான பள்ளம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மெயின்ரோடு வயலூர் ராமாபுரம் பகுதியில் உள்ள சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையின் நடுவே குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. இவை தற்போது வரை சரிவர மூடுப்படாததால் சாலை நடுவே ஆபத்தான பள்ளங்களாக மாறி உள்ளன. இதனால் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ராமாபுரம் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், கும்பகோணம்.
சேறும், சகதியுமான சாலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியில் உள்ள 54 புத்தூர் கிராமத்தில் உள்ள சாலை சேறும், சகதியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 54 புத்தூர் கிராமத்தில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-கல்யாணகுமார், 54 புத்தூர்.
Related Tags :
Next Story