மாவட்ட செய்திகள்

காய்கறிகள் விலை கடும் உயர்வு + "||" + Vegetable prices soar

காய்கறிகள் விலை கடும் உயர்வு

காய்கறிகள் விலை கடும் உயர்வு
காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு முன்பு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்ட விலையை விட தற்போது கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் அவரைக்காய் ரூ.120, கேரட் ரூ.55, பீன்ஸ் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.50, கத்தரிக்காய் ரூ.50 என இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது. கிராமப் பகுதியில் இருந்து வரும் உள்ளூர் காய்கறிகள் மழையின் காரணமாக விற்பனைக்கு வரவில்லை. சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், காலிபிளவர், ஒட்டன்சத்திரம், தர்மபுரியில் இருந்து தக்காளி போன்ற காய்கறிகள் வரத்து குறைந்து போனதால் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது
ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.
2. நாளை முழு ஊரடங்கு: காய்கறி, இறைச்சி, மளிகைப்பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி காய்கறி, இறைச்சி மற்றும் மளிகைப்பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். அதற்காக கடைகளில் கூட்டமாக குவிந்தனர்.
3. புதூர், கரிமேடு பகுதியில் காய்கறி, இறைச்சி மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
மதுரை புதூர், கரிமேடு பகுதியில் உள்ள காய்கறி, இறைச்சி மார்க்கெட்டுகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். முறைகேடான மின்னணு தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்தனர்.
4. ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.200-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
5. காய்கறிகளை நியாய விலைக் கடைகளில் பாதி விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அனைத்து காய்கறிகளையும் நியாய விலைக் கடைகளில் பாதி விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.