பெங்களூரு நகரில் மக்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்
பெங்களூரு நகரில் நாள் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்ததும், கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
பெங்களூரு:
நாள் முழுவதும் சாரல் மழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கொட்டி மழையால் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. அந்த காற்றழுத்த தாண்வு மண்டலத்தின் தாக்கத்தால் பெங்களூருவிலும் மழை பெய்து வருகிறது. நேற்று நாள் முழுவதும் சாரல் மழை பெய்தபடியே இருந்தது.
இதன் காரணமாக நகரின் பல்வேறு சாலைகளில் வாகன நெரிசல் உண்டானது. லால்பாக் ரோடு, ஜே.சி.ரோடு, ஓசூர் ரோடு, ரிச்மண்டு ரோடு, எம்.ஜி.ரோடு, சில்க்போர்டு, மடிவாளா, செயின்ட் ஜான்ஸ் சர்க்கிள், கார்ப்பரேஷன் சர்க்கிள், டவுன் ஹால் சர்க்கிள், மைசூரு ரோடு உள்ளிட்ட நகரின் பல ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குடும் குளிரால் அவதி
நேற்று காலை முதல் இரவு வரை சாரல் மழை தூறிக் கொண்டே இருந்தது. அத்துடன் பனி மூட்டமும் நிலவியது. இதனால் பெங்களூரு நகரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. பெங்களூரு நகரில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. இதன்காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். கடும் குளிர், சாரல் மழை காரணமாக மக்கள் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
இதன்காரணமாக அன்றாட இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகள் ரத்து
பெங்களூருவில் இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூரு மட்டுமின்றி பெங்களூருவை சுற்றியுள்ள மாவட்டங்களான கோலார், சிக்பள்ளாப்பூர், ராமநகர், துமகூரு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக சில தனியார் பள்ளிகள் குழந்தைகளுக்கான நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளன. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
Related Tags :
Next Story