தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Nov 2021 3:37 AM IST (Updated: 12 Nov 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

எரியாத விளக்குகள்
வில்லுக்குறி பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவிடைக்கோடு சாய் தெருவில் மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் இரவு நேரம் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதை பயன்படுத்தி சமூக விரோத சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய விளக்குகளை அமைத்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 -ஸ்ரீராம், திருவிடைக்கோடு.
வடிகால் ஓடை தேவை
பளுகல் பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டில் செல்விஸ்டர் சாலையில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
                                        -அன்பையன், கருமானூர்.
வீணாகும் குடிநீர்
நாகர்கோவில் அருகே பொட்டல் விளக்கு பகுதியில் இருந்து காரவிளை செல்லும் சாலையில் சம்புகுளம் உள்ளது. இந்த குளத்தின் அருகில் சாலையோரத்தில் உள்ள ஒரு குடிநீர் குழாயில் நல்லி உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் பாய்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய நல்லி அமைத்து வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                      -அஜித்ராஜா, தெங்கம்புதூர்.
பஸ் வசதி தேவை
ஈத்தாமொழி சந்திப்பில் இருந்து தர்மபுரம், ஆடராவிளை, வைராகுடியிருப்பு, பருத்திவிளை, கோணம், வடசேரி பஸ்நிலையம், பார்வதிபுரம் வழியாக பண்டாரதோப்புக்கு தினமும் காலை 7.45 மணிக்கு பள்ளி மாணவ-மாணவிகள் வசதிக்காக ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொேரானா ஊரடங்குக்கு பின் அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால், தர்மபுரம், ஆடராவிளை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிக்கு குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி மீண்டும் பஸ் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
                               -ஆர்.பிரபக்குமார், ஆடராவிளை. 

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ராமபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குலசேகரன்புதூரில் இருந்து லெட்சுமிபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சமத்துவபுரம் சந்திப்பில் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அந்த பள்ளத்தில் மண் போட்டு மூடப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதில் சிக்கி தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். வாகனங்களும் சேதமடைகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
                                     -குமரேசன், லெட்சுமிபுரம்.
மின் கம்பங்கள் மாற்றப்படுமா?
தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குலசேகரன்புதூர் அத்திக்குளம் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள 3 மின் கம்பங்களின் அடிப்பகுதி துருபிடித்து சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கம்பங்கள் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?.
                                         -சந்திரன், அத்திக்குளம்.
குளக்கரைகளை பலப்படுத்த வேண்டும்
இரவிபுதூர் கிராமத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பெரிய குளங்கள் உள்ளன. தற்போது பெய்த மழையால் குளங்கள் நிரம்பியுள்ளது. ஆனால், குளத்தில் செடிகள் கொடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால், குளங்களில் போதிய நீரை தேக்கி வைக்க முடியாமல் உடைப்பு ஏற்படுகிறது. எனவே, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றி, அதன் கரைகளை தேவையான மண் கொண்டு பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                  -கே.எ.நாராயணன், மருங்கூர்.
விபத்து அபாயம்
பார்வதிபுரத்தில் இருந்து அனந்தன்நகர் செல்லும் சானல் கரை சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பள்ளத்தில் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                         -ஸ்ரீராம், ஆசாரிபள்ளம். 







Next Story