கயத்தாறு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால், 5 அரசு விரைவு பஸ்களை அதிகாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது


கயத்தாறு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால், 5 அரசு விரைவு பஸ்களை அதிகாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
x
தினத்தந்தி 12 Nov 2021 5:33 PM IST (Updated: 12 Nov 2021 5:33 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால், 5 அரசு விரைவு பஸ்களை அதிகாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கயத்தாறு:
கயத்தாறு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால், 5 அரசு விரைவு பஸ்களை அதிகாரிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுங்கச்சாவடி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. சுங்கச்சாவடியை கடந்து செல்லும் 2, 3 சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், ‘பாஸ்டேக’் முறை அமல்படுத்தப்படுகிறது.
இந்த முறைப்படி, ஒவ்வொரு வாகனத்தின் முகப்பிலும் ஒட்டப்பட்ட பாஸ்டேக் மின்னணு அட்டை மூலம், சுங்கச்சாவடியை கடந்து அந்த வாகனம் செல்லும்போது தானாகவே கட்டணம் இணையவழியில் செலுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வாகனத்தின் முகப்பிலும் பாஸ்டேக் அட்டை ஒட்டப்பட்டு, குறிப்பிட்ட தொகை முன்பணமாக வங்கியில் செலுத்தப்படுகிறது.
அரசு பஸ்கள் சிறைபிடிப்பு
இந்த நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்த அரசு விரைவு பஸ் நேற்று அதிகாலை 5 மணியளவில் கயத்தாறு சாலைப்புதூர் சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்போது அந்த பஸ்சுக்கான சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தப்படவில்லை என கூறி, அந்த பஸ்சை அனுமதிப்பதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள், அதிகாரிகள் மறுத்து சிறைபிடித்தனர்.
இதேபோன்று சென்னையில் இருந்து நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த மேலும் 4 அரசு விரைவு பஸ்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தப்படவில்லை என்று கூறி, பஸ்களை அனுமதிக்க சுங்கச்சாவடி ஊழியர்கள், அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
பயணிகள் அவதி
இதையடுத்து நீண்ட நேரமாக பஸ்களில் காத்திருந்த பயணிகளை மாற்று பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து காலை 9.30 மணியளவில் 5 அரசு பஸ்களுக்குமான சுங்கச்சாவடி கட்டணத்தை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இணையவழியில் செலுத்தினர். அதன் பின்னரே 5 பஸ்களையும் சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதித்தனர்.
கயத்தாறு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால், 5 அரசு விரைவு பஸ்களை அதிகாரிகள் சிறைபிடித்து நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story