பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கனமழையால் குடிசைகள் இடிந்தன


பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கனமழையால்  குடிசைகள் இடிந்தன
x
தினத்தந்தி 12 Nov 2021 7:57 PM IST (Updated: 12 Nov 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் கனமழையால் 5 குடிசைகள் இடிந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர்.

குடிசைகள் இடிந்தன

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பிஞ்சிவாக்கத்தில் உள்ள இருளர் இன மக்கள் 5 பேரின் குடிசைகளில் மழைநீர் புகுந்து இடிந்தன.

மேலும் அந்த பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அவர்கள் பரிதவித்தனர்.

தொடக்கப்பள்ளியில் தங்கவைப்பு

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மழையால் சேதமடைந்த குடிசைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் குடிசைகளை இழந்து பாதிக்கப்பட்ட இருளர் இன மக்கள் 25 பேரை மீட்டு பிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் தங்கவைத்து அவர்களுக்கு 3 வேளை உணவு, பாய், போர்வை, உணவு பொருட்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் நிவாரண பொருட்களை வழங்கினார். அவருடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.


Next Story