விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி


விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி
x
தினத்தந்தி 12 Nov 2021 7:58 PM IST (Updated: 12 Nov 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலியானார்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 55). ஈ.சித்தூர் ஊராட்சி தி.மு.க. செயலாளராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தண்ணீர்பந்தம்பட்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் எரியோடு-வேடசந்தூர் சாலையில் வரப்பட்டி பிரிவில் வந்துகொண்டிருந்தார். அப்போது ஒருவர் திடீர் என்று சாலையின் குறுக்கே நடந்து சென்றார். எனவே அவர் மீது மோதாமல் இருப்பதற்காக சோமசுந்தரம் மோட்டார்சைக்கிளை திருப்பினார். இதில் அவர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். 
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. ஆனால் வழியிலேயே சோமசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story