கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி
போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பரிதாபமாக இறந்தான்.
போளூர்
போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பரிதாபமாக இறந்தான்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே திருசூர் கிராமத்தில் வசிப்பவர் பாபு. இவர் ஆரணியில் உள்ள பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு பிரபு (14), ஸ்ரீதர் (7) என்ற மகன்களும், நிவேதா என்ற மகளும் உள்ளனர். பிரபு போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று காலை 11 மணி அளவில் சித்ரா, நிலத்தில் மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார். பிரபு நிலத்தில் உள்ள கிணற்றில் இறங்கி தண்ணீர் கையில் அள்ளும்போது, கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டான்.
இதை பார்த்த சித்ரா அதிர்ச்சி அடைந்து உறவினர்கள் உதவியுடன் போளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று கிணற்றில் மூழ்கி பிரபுவின் பிணத்தை வெளியே எடுத்தனர்.
இதுகுறித்து போளூர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story