சின்னமனூரில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை


சின்னமனூரில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Nov 2021 9:39 PM IST (Updated: 12 Nov 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூரில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் விநாயகர்நகரை சேர்ந்தவர் அன்னலட்சுமி (வயது 50). இவரது கணவர் பொன்புகழேந்தி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு தரணிதரன் (21) என்ற மகன் இருந்தார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக கடந்த வாரம் அவர் தனது சொந்த ஊருக்கு வந்தார். ஆனால் அதன்பிறகு தரணிதரன், கல்லூரிக்கு திரும்பி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தரணிதரன் விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தரணிதரன் நேற்று இறந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story