திருமுருகன் பூண்டியில் சாலையைசீரமைக்க கோரி சாலையில் வாழை மரம் நடும் போராட்டம்


திருமுருகன் பூண்டியில் சாலையைசீரமைக்க கோரி சாலையில் வாழை மரம் நடும் போராட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2021 9:53 PM IST (Updated: 12 Nov 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

திருமுருகன் பூண்டியில் சாலையைசீரமைக்க கோரி சாலையில் வாழை மரம் நடும் போராட்டம்

அனுப்பர்பாளையம்
திருமுருகன் பூண்டியில் சாலையைசீரமைக்க கோரி சாலையில் வாழை மரம் நடும் போராட்டம் நடந்தது.
சேதமடைந்த சாலை
அவினாசி ஒன்றியம் மங்கலம் ரோடு சாலை பிரிவில் இருந்து அம்மாபாளையம் எம்.ஜி.ஆர். நகர் வரை சில மாதங்களுக்கு முன்பு சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் வேலை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சாலை வேலாயுதம்பாளையம் ஊராட்சி மங்கலம் சாலை பிரிவில் இருந்து முக்கால் கிலோ மீட்டரும், பூண்டி பேரூராட்சி 2 கிலோமீட்டர் இணைப்பு சாலையாக உள்ளது. இந்த நிலையில் தார் சாலையில் பள்ளம் தோண்டிய காரணமாக சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
 இதனை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக உமையஞ் செட்டிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சாலையில் வாழை மரம் நடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
போராட்டம்
 இதனை அறிந்த வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களிடம், தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  விரைவில் பணிகள் தொடங்கும் என கூறினார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் திருமுருகன்பூண்டி பேரூராட்சி எல்லை உமையஞ் செட்டிபாளையம் பகுதியில் சாலையில் நேற்று வாழைமரம் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் இரண்டு இடங்களில் நடை பெறாமல் உள்ளது., இந்த இணைப்பு நடைபெற்றவுடன், விரைவில் சாலையை சீரமைத்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்களும் கட்சியினரும் கலைந்து சென்றனர். 

Next Story