அரக்கோணம் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்
மழைநீரை அகற்றக்கோரி சாலை மறியல்
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த காவனூர் நரசிங்கபுரம் பகுதியில் குடியிருப்புக்குள் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், அடிப்படை தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று திடீரென அவ்வழியாக சென்ற பஸ்சை சிறைபிடித்து சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story