கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு .2,500 கன அடி நீர் செல்கிறது.
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2,500 கன அடி நீர் செல்கிறது.
குடியாத்தம்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2,500 கன அடி நீர் செல்கிறது.
வெள்ளப்பெருக்கு
குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி கோடிப்போய் கொண்டிருக்கிறது. மேலும் சுற்றியுள்ள நீர்நிலைகளிலும் நீர் நிரம்பி வழிந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆந்திர மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வருகிறது. அதே போல் ஆர். கொல்லப்பல்லி பகுதியில் ஆந்திராவில் இருந்து வரும் கொட்டாற்று தண்ணீர் சுமார் 300 கன அடி சேங்குன்றம், சின்னாலப்பல்லி, சீவூர் வழியாக குடியாத்தம் அருகே போடிப்பேட்டை பகுதியில் கவுண்டன்யமகாநதி ஆற்றில் கலக்கிறது. இதனால் 2,500 கன அடிக்கும் அதிகமான நீர் கவுண்டன்யாமகாநதி ஆற்றில் செல்வதால் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
அதிகாரிகள் கண்காணிப்பு
இதனால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் செல்லும் வெள்ளத்தை காண காலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து செல்பி எடுத்தனர். போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.
குடியாத்தம் மோர்தானா அணை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களை நீர்வள ஆதார துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், தாசில்தார் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story