சித்தருக்கு சிறப்பு வழிபாடு


சித்தருக்கு சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 13 Nov 2021 12:18 AM IST (Updated: 13 Nov 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சித்தருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் முருகப்பெருமான் அவதாரத்தில் சித்தர் மலர் மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story