பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மேலசெவல் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி சந்திரா (வயது 61). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட சந்திரா நேற்று தனது வீட்டின் சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story