2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 Nov 2021 12:51 AM IST (Updated: 13 Nov 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளம் அதிசய விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுடலைக்கண்ணு என்ற கண்ணன் (வயது 35), சிவன் என்ற சிவனு (51). இவர்கள் 2 பேரும் கிருஷ்ணாபுரம் மேட்டு குடியை சேர்ந்த பீர் என்ற அய்யாதுரை, அவருடைய மகன் கோதர் சரவணன் ஆகிய 2 பேரையும் கொலை செய்த வழக்கில், சிவந்திப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று, சுடலைக்கண்ணு உள்ளிட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து சுடலைக்கண்ணு உள்ளிட்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை, சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

Next Story