ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நிறைவு


ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நிறைவு
x
தினத்தந்தி 13 Nov 2021 12:56 AM IST (Updated: 13 Nov 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நிறைவு

ஸ்ரீரங்கம்.நவ.13-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு இவ்விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.  நிறைவு நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story