முதியவர் கொலையில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடையநல்லூரில் முதியவர் கொலையில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் சொக்கம்பட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டியன் (வயது 64). இவர் வரப்பு பிரச்சினையின் காரணமாக கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செல்லையா மகன் சந்தனபாண்டி (40) கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், சொக்கம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.
இதனை கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஏற்று சந்தன பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சந்தன பாண்டி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, சொக்கம்பட்டி போலீசார், பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
Related Tags :
Next Story