விவசாயி தீக்குளிக்க முயற்சி


விவசாயி தீக்குளிக்க முயற்சி
x

பட்டா மாறுதல் செய்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றார்.

காரியாபட்டி, 
பட்டா மாறுதல் செய்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றார். 
தீக்குளிக்க முயற்சி 
காரியாபட்டி அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மனைவி முத்துமாரி (வயது 42). இவரது மகன் நிகிலேஷ் (8), மகள் சிவசந்தியா (28), முத்துமாரியின் தம்பி பெரியசாமி (37), விவசாயி. இவர்கள் அனைவரும் காரியாபட்டி தாலுகா அலுவலகம் வந்தனர். அப்போது அவர்கள் போலியாக பட்டா மாறுதல் செய்து விட்டதாக சத்தம் போட்டுக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் பெரியசாமி, தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றார். 
விசாரணை 
அப்போது அங்கு இருந்த போலீசார் விரைந்து வந்து மண் எண்ணெய் கேனை கைப்பற்றினர். உடனடியாக அங்கு வந்த தனி தாசில்தார் சிவக்குமார், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம், ஜெயபால் மகள் சிவசந்தியா கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- 
எனது தந்தை ஜெயபால் இறந்துவிட்டார். இந்நிலையில் எனது தந்தை ஜெயபால் எழுதி கொடுத்த கிரைய ஒப்பந்த உடன்படிக்கையை வைத்து போலியாக பட்டா மாறுதல் செய்துள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 
பட்டாவை ரத்து செய்து தருவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 இந்த சம்பவம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story