சாவிலும் இணை பிரியாத தம்பதி
விருதுநகரில் சாவிலும் தம்பதி இணை பிரியவில்லை.
விருதுநகர்,
விருதுநகர் முத்துராமன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 83). எலக்ட்ரிக்கல் ஒப்பந்தக்காரர். இவருைடய மனைவி வேலம்மாள் (75). இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.
சுந்தரராஜ், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுந்தரராஜ் இறந்தார். இதனால் அதிர்ச்சியுற்ற அவரது மனைவி வேலம்மாள் கணவரின் உடல் மீது விழுந்து கதறி அழுதார். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த வேலம்மாள் நேற்று அதிகாலையில் கணவரின் உடல் மீது படுத்தபடியே உயிர் துறந்தார். இணை பிரியாத இந்த தம்பதியின் மரணம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story