ஏற்காட்டில் 72 மி.மீட்டர் மழை பதிவு


ஏற்காட்டில் 72 மி.மீட்டர் மழை பதிவு
x
தினத்தந்தி 13 Nov 2021 1:12 AM IST (Updated: 13 Nov 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் 72 மி.மீட்டர் மழை பதிவு

சேலம், நவ.13-
சேலம் மாவட்டத்தில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 72 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சாரல் மழை
வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விட்டு விட்டு சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது.
நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகலில் சாரல் மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ெசல்லும் போது குடையை பிடித்தபடி சென்றதை காண முடிந்தது.
வாகன ஓட்டிகள் சிரமம்
ஏற்காடு மலைப்பாதையில் நேற்று காலை முதல் கடும் மேகமூட்டத்தால் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கும், அங்கிருந்து சேலத்துக்கும் வந்த வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் மிகவும் சிரமத்துடன் பயணம் செய்தனர். மேக மூட்டத்தால் அவர்கள் வாகனத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே சென்றனர். தொடர்ந்து மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு இருந்தார்.
நேற்று காலை நிலவரப்படி அதிக பட்சமாக ஏற்காட்டில் 72 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பதிவான அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- 
காடையாம்பட்டி-48.4, எடப்பாடி-32.2, சங்ககிரி-32, பெத்தநாயக்கன்பாளையம்-29, ஓமலூர்-25, மேட்டூர்-22.2, கரியகோவில்-21, தம்மம்பட்டி-20, சேலம்-16.5, ஆனைமடுவு-14, ஆத்தூர்-8.2, கெங்கவல்லி-5.8, வீரகனூர்-4.

Next Story