விருதுநகர் போலீஸ்காரர்கள் 2 பேர் திடீர் தற்கொலையால் பரபரப்பு


விருதுநகர் போலீஸ்காரர்கள் 2 பேர் திடீர் தற்கொலையால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Nov 2021 1:14 AM IST (Updated: 13 Nov 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் போலீஸ்காரர்கள் 2 பேர் திடீரென தற்கொலை செய்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை, 
விருதுநகர் போலீஸ்காரர்கள் 2 பேர் திடீரென தற்கொலை செய்து கொண்டனர். 
சிறப்பு போலீஸ்காரர் 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி இ.பி. காலனியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் ராஜன் (வயது 40). திருச்சுழியில் போலீஸ்காரராக பணியாற்றி இவர், தற்போது விருதுநகரில் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். 
இந்தநிலையில் ராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், உயிருக்கு போராடிய அவரை மீட்டு அவரது குடும்பத்தினர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது. 
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டார்.இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இவருக்கு வித்யா(33) என்ற மனைவியும், தர்ஷினி (11), சாய்ராஜ் கண்ணன்(5) என இரு குழந்தைகளும் உள்ளனர். 
தூக்குப்போட்டு தற்கொலை 
மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் மெய்யப்பன் 3-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள்.
 இவர் விருதுநகரில் ஆயுதப்படை போலீஸ்காராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் சென்னை போலீஸ் அணியிலும் உள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்தவர் சாப்பிட வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது தம்பி அவரை பார்க்க சென்ற போது அங்குள்ளள படுக்கைஅறையில் கார்ததிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கரிமேடு போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரித்த போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Next Story