சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு நூதன போராட்டம்
ஒரத்தநாடு அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு நூதன போராட்டம் நடைபெற்றது.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு நூதன போராட்டம் நடைபெற்றது.
சேறும் சகதியுமான சாலை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் தலையாமங்கலம் கிராமத்தில் விளை நிலங்களுக்கு செல்லக்கூடிய சுமார் 3 கிலோமீட்டர் தூரமுள்ள ஏரிக்கரை வழியான சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இந்த சாலையின் வழியே நடந்து செல்ல முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மழைக் காலங்களில் சாலையின் வழியே செல்லமுடியவில்லை என்றும், சாகுபடிக்கு தேவையான பொருட்களையும் கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது.
நாற்று நட்டு போராட்டம்
எனவே இந்த சாலையை சீரமைத்து மேம்படுத்தி தர வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இந்த சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாம் துரித நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story