குடிநீர் குழாயை சீரமைத்து தர வேண்டும்


குடிநீர் குழாயை சீரமைத்து தர வேண்டும்
x
தினத்தந்தி 13 Nov 2021 2:11 AM IST (Updated: 13 Nov 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாயை சீரமைத்து தர வேண்டும்

தஞ்சை மாநகராட்சி 29-வது வட்ட வாடிவாசல் கடைதெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாயை மர்மநபர்கள் உடைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் குழாயை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வீணாகி சாலையோரம் வழிந்தோடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைத்து தர வேண்டும் .
-லோகநாதன், தஞ்சாவூர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருகருகாவூர் அருகே நாகலூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இததனால் அந்த பகுதி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த அம்மாப்பேட்டை பகுதியில் அகரமாங்குடி கிழக்கு தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சேறும், சகதியுமான சாலையில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி நோய் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் உள்ள வி.என்.டி.நகர் பகுதியில் உள்ள சண்முகசுந்தரம் நகரில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கிவிடுகின்றன. மேலும், சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தரவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story