தடயவியல் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
தடயவியல் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
ஊட்டி
கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள், ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க தடயவியல் மாதிரிகள் இன்றியமையாதது. நீலகிரி மாவட்டத்தில் 5 காவல் உட்கோட்டங்களில் பணிபுரிந்து வரும் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தடயவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ஊட்டியில் உள்ள பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தடயவியல் நிபுணர்கள் முனிராஜ், வேல்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் கலந்துகொண்டார். நீலகரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தடயவியல் சோதனை மூலம் சம்பவ இடத்தில் பதிவான கை ரேகைகள், பிற பொருட்களை பதிவு செய்வது, அதனை ஒப்பிட்டு பார்த்து குற்றவாளிகளை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
Related Tags :
Next Story