‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
குவிந்து கிடக்கும் குப்பைகள்
தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகர் அருகே உள்ள பெரியார்நகரில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பிவிட்டது. இதனால் தொட்டி அருகிலேயே குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர். இதன் காரணமாக பெரியார் நகரில் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அள்ளிச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருக்குமரன், அல்லிநகரம்.
பள்ளம், மேடாக காட்சியளிக்கும் சாலை
பழனி அருகே உள்ள தும்பலப்பட்டியில் இருந்து மரிச்சிலம்புக்கு செல்லும் சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அறிவரசன், மானூர்.
தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்
சின்னமனூர் நகராட்சி பிரதான சாலையில் உள்ள பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சிலர் குப்பைக்கழிவுகளை கால்வாயில் போட்டுச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பேச்சிமுத்து, சின்னமனூர்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
கம்பம் நகராட்சி கிராமசாவடி தெருவில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண் பாதையாகவே உள்ளது. மேலும் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படாததால் கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்கவும், சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஈஸ்வரன், கம்பம்.
குண்டும், குழியுமாக மாறிய சாலை
தேனியை அடுத்த ஸ்ரீரெங்கபுரத்தில் இருந்து வெங்கடாசலபுரம் வரை செல்லும் தார்சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எத்திராஜ், வெங்கடாசலபுரம்.
Related Tags :
Next Story