விநாயகர் சந்திரசேகரர் உலா


விநாயகர் சந்திரசேகரர் உலா
x
தினத்தந்தி 13 Nov 2021 10:17 PM IST (Updated: 13 Nov 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை விநாயகர் சந்திரசேகரர் உலா நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை விநாயகர், சந்திரசேகரர் உலா நடந்தது.

விழாவை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில்இன்று 4-ம் நாள் விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு இன்று காலை கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

 தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வழிபட்டனர். 

தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலின் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது. 

பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவிலில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது. கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story