பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Nov 2021 4:54 PM GMT (Updated: 2021-11-13T22:24:23+05:30)

ஆரணி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

ஆரணி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ஆரணிைய அடுத்த அக்ராபாளையம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரின் மனைவி ஷர்மிளா என்ற ஷர்மிளா ஷீலாராணி (வயது 27). இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 

அவர்களுக்கு 2 வயதில் லிங்கேஷ், லித்ஷாஸ்ரீ என்ற இரட்டைக்குழந்தைகள் உள்ளனர். 

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷர்மிளா ஷீலாராணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் ஷர்மிளாவின் தாயார், எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story