வீட்டின் 3வது மாடியில் விளையாடிய சிறுமி கீழே தவறி விழுந்து படுகாயம்
அரக்கோணத்தில் வீட்டின் 3வது மாடியில் விளையாடிய 3 வயது சிறுமி தவறி கீழே சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தாள்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் வீட்டின் 3-வது மாடியில் விளையாடிய 3½ வயது சிறுமி தவறி கீழே சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தாள்.
சம்பவத்தை ேநரில் பார்த்த தாயாரும் மயக்கம் அடைந்தார். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தவறி விழுந்த சிறுமி
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார்மீனா. இவர் அரக்கோணம் ரெயில்வே என்ஜினீயரிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ரீனா மீனா. இவர்களுக்கு 6 வயது, 3½ வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
அவர்கள், அரக்கோணம் காந்திநகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ரீனாமீனா இன்று காலை வீட்டின் 3-வது மாடியில் துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தார்.
அருகில் 3½ வயது மகள் ராகினி மீனா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் நிலைதடுமாறி 3-வது மாடியில் இருந்து தவறி கீழே சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தாள். குழந்தை கீழே விழுந்ததை கண்ட ரீனா மீனா அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார்.
தீவிர சிகிச்ைச
உடனே அருகில் இருந்தவர்கள் குழந்தையையும், ரீனா மீனாவையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தையை மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவிலும், ரீனா மீனாவை மேல் சிகிச்சைக்காக பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரக்கோணம் மண்டல துணை தாசில்தார் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் சுந்தரம் மற்றும் அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story