வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்ப்பு


வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 14 Nov 2021 12:20 AM IST (Updated: 14 Nov 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்ப்பு

அடுக்கம்பாறை

ஊரக உள்ளாட்சி தேர்தல் சில வாரங்களுக்கு முன்பு  நடந்து முடிந்தது.

 இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதில் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவைகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். 


மேலும் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது. 

இந்த நிலையில் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அரசு அதிகாரிகள், செயல் அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story