சிறப்பு கிராம சபை கூட்டம்
காரியாபட்டி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே சாலைமறைக்குளம், கம்பிக்குடி ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2019-20-ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சமூக தணிக்கை செய்யப்பட்டது. மாவட்ட வள அலுவலர் மணி, வட்டார வள அலுவலர் ஜெகதீஸ்வரன் திட்டத்தின் நோக்கம் பற்றி எடுத்து கூறினர். கூட்டத்தில் மூத்த உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் கலந்து கொண்டனர். முடிவில் கம்பிக்குடி ஊராட்சி செயலர் முத்துராக்கு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story